தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அமித் ஷா இன்று அறிவித்தார். தெலுங்கானாவில் பதவிக்காலம் முடிவடைவதற்கு 9 மாதங்கள் முன்பாகவே தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் முதல்வருமான சந்திரசேகரராவ் ஆட்சிக்காலத்தை முடித்துக் கொள்வதாக கூறி அமைச்சரவையை கூட்டி முடிவெடுத்து, அதை ஆளுநருக்கு பரிந்துரையாக அனுப்பினார்.