புறா மணி கொலை ! சென்னையில் பயங்கரம்-வீடியோ

2018-09-15 2

பிரபல கொள்ளையன் புறாமணி வெட்டிக்கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரவாயல் அடுத்த வானகரம், மீன் மார்கெட் அருகே உள்ள காலி இடத்தில் வாலிபர் ஒருவர் உடலில் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனர். இதில் கொலை செய்யப்பட்டவர் விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் புறாமணி என்பதும் இவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. மேலும் நேற்று இரவு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் நண்பர்களுடன் உட்கார்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மனியை ஓட, ஓட விரட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எந்த திருட்டு வழக்கிலும் ஈடுபடமாட்டேன் என்று கூறி மணி விருகம்பாக்கம் போலீசில் எழுதி கொடுத்து விட்டு வந்துள்ளார். அதன் பிறகு கோடம்பாக்கத்தில் நடந்த குற்ற சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க மணி உதவியதாக கூறப்படுகிறது இதன் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதாஎன்ற கோணத்தில் மதுரவாயல் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Des : The famous pirate pigeon strip made a stir in the incident

Videos similaires