பேருந்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த காவலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனந்திலிருந்து கும்பகோணம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. அதில் ஆயுத படையில் காவலராக பணியாற்றும் மணிகண்டன் பயணம் செய்துள்ளார். பேருந்து ஜெயங்கொண்டம் அருகே சென்ற போது அதில் பயணம் செய்த மாணவிகளிடம் மணிகண்டன் சில்மிஷம் செய்துள்ளார். இது குறித்து மாணவிகள் நடத்துனரிடம் கூற அவர் மணிகண்டனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நடத்துநர் மற்றும் மாணவிகளை தாக்கியுள்ளார். மணிகண்டன் தாக்கியதை கண்ட சகபயணிகள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்ததுடன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.