காவல்துறையில் பணியை நிறைவு செய்துள்ள தாம், இதுவரை எந்த தவறும் செய்ததில்லை என்றும், கிரிமினல்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் யாருடைய பெயரும் வேண்டுமானாலும் இருக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் குட்கா விவகாரம் தொடர்பாக தமது கவனத்திற்கு வந்த உடனே மேலிடத்திற்கு தெரியப்படுத்தியதகாவும், குட்கா ஊழல் குறித்து முதல் கட்ட விசாரணை தொடங்கியதாகவும் கூறினார். குட்கா விவகாரம் தொடர்பாக மாதவரத்தில் துணை ஆணையராக இருந்த விமலாவை அழைத்து விசாரித்ததாகவும், அப்போது குட்கா லஞ்சம் குறித்த எந்த தகவலும் தெரியாது என விமலா கூறியதாகவும் ஜார்ஜ் தெவித்தார்