ஜன் தன் யோஜனா திட்டம், கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. சாதாரண மக்களுக்கும் வங்கி கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம் போன்ற நிதி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த திட்டம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளது.