இந்த பேச்சுவார்த்தையில் இந்திய சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும், அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. இந்த விவகாரங்களில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.