கேரளாவில் ஒரு வருடத்திற்கு அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்படும் - கேரள அரசு

2018-09-05 0

கேரளாவில் கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். மழை, வெள்ள பாதிப்புக்கு சுமார் 400 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு மத்திய அரசு, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், வங்கிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.