தமிழக மீனவர்களின் படகுகளை அரசுடமை ஆக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் தள்ளுபடி

2018-09-05 0

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக உள்ளது. இதுதொடர்பாக இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நெடுந்தீவு அருகே பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் மூன்று படகுகளை, புதிய கடல்வள பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குமாறு கடந்த மாதம் 28ஆம் தேதி ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Videos similaires