திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் ஆயிரம் பேருக்கு மார்பளவு, உயரம், ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டத்திற்கான தேர்வு நடைபெற்றது.