மு.க.ஸ்டாலின் சுட்டுரை பதிவு வேதனை அளிப்பதாகவும், இவ்வளவு மோசமான தலைவர்கள் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். தனது பாதுகாப்புக்காக தான் ஒருபோதும் கவலைப்பட்டது கிடையாது என்றும், இதன் பின்னணியில் யாராவது இருக்கலாம் என்ற அடிப்படையில் தான், அந்த பெண் மீது புகார் அளித்ததாக கூறியுள்ளார். அவரது செயலுக்கு சக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவளித்திருப்பது தவறான அரசியல் என்றும். ஒரு சக அரசியல் தலைவருக்கு பிரச்சனை ஏற்படும்போது இதுபோன்று பதிவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதி இருந்திருந்தால் இவ்வாறு செயல்பட்டிருக்க மாட்டர் என்றும் தெரிவித்துள்ளார்.