புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது. அதன்படி இந்த 50 இடங்களில் புதுச்சேரி அரசு ஒதுக்கீடாக17 இடங்களை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டும், மருத்துவக்கல்லூரி நிர்வாகம் அனைத்து இடங்களையும் நிரப்பிவிட்டதாக கூறப்படுகிறது. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரிக் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.