கேரளாவில் வெள்ளம் வடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி மக்கள் சற்று நிம்மதியடைந்த நிலையில் லெப்டோஸ்பிரோசிஸ் எனும் விலங்குகளின் மூலம் மனிதர்களுக்குப் பரவும் எலிக்காய்ச்சல் கேரள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை கோழிக்கோட்டில் மட்டும் 28 பேரும், ஆலப்புழா, திருச்சூர், பத்தணம்திட்டா ஆகிய இடங்களில் மொத்தம் 40 பேரும் இந்த எலிக்காய்ச்சல் அறிகுறியோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரு தினங்களில் மட்டும் 8 பேர் என மொத்தம்15 பேர் உயிரிழந்துள்ளனர்.