தேமுதிக நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் உடல் நிலை குறைவு காரணமாக சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், விஜயகாந்த், திடீரென நேற்றிரவு 8 மணி அளவில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே விஜய்காந்த் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக தகவல்கள் பரவியதால் தேமுதிக தொண்டர்கள் கவலையடைந்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கமான பரிசோதனைக்காக விஜய்காந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது. இதனிடையே விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.