இந்தியா முழுவதும் விவசாய கடன்களை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி வருகிற 5-ம் தேதி டெல்லியில் பேரணி மற்றும் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர். இந்நிலையில், தஞ்சை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள், கடைமடைக்கு இன்னும் தண்ணீர் வராத நிலையில், மன்னார்க்குடியில், தமிழக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் பாராட்டு விழா நடத்துவது வெட்க கேடானது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.