கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கம்மாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கம்மாபுரம் பேருந்து நிலைய சாலையோரத்திலும், 11, 12ஆம் வகுப்பு வரையிலான ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள கட்டிடங்களிலும் பயின்று வருகின்றனர்.