குமரி மாவட்டத்தில், 6 தொகுதிகளில் 14 லட்சத்து 47 ஆயிரத்து 101 வாக்காளர்கள் உள்ளதாக தகவல்

2018-09-01 2

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே இன்று வெளியிட்டார். மாவட்டத்தில், கன்னியாகுமரி , நாகர்கோவில் , குளச்சல். பத்மநாபபுரம், விளவன்கோடு, கிள்ளியூர் உள்ளிட்ட 6 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன. 6 தொகுதிகளிலும்14 லட்சத்து101 வாக்களர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய வாக்காளர்கள் 4 ஆயிரத்து 260 சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இரு பதிவு இட மாற்றம் ஆகிய காரணங்களால் 33 ஆயிரத்து 399 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த வாக்களார் பட்டியல் வெளியீட்டின் போது அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்க பட்ட அனைத்து கட்சிகளின் பிரநிதிகளும் உடன் இருந்தனர்.

Videos similaires