ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு இன்று 2 தங்கப் பதக்கங்கள்

2018-09-01 1

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு தொடரின் குத்துச்சண்டை போட்டியில் ஆடவருக்கான 49 கிலோ எடை பிரிவில் இந்திய வீரர் அமித் பாங்கல், ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரரான ஹசன்பாயுடன் மோதினார். ஆட்டத் தொடக்கத்தில் இருந்தே அமித் ஆதிக்கம் செலுத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 3 - 2 என்ற புள்ளிக் கணக்கில் அமத் பங்கல் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார். ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாக அமித் கூறினார்.

Videos similaires