டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் விடைத்தாள்களை வெளியே எடுத்து திருத்தி, அதிக மதிப்பெண்கள் தொடர்பாக மோசடியை விரிவான ஆதாரங்களுடன், சத்தியம் தொலைக்காட்சி சிறப்புச் செய்தி வெளியிட்டது. இதை மேற்கோள் காட்டி, ஸ்வப்னா என்ற திருநங்கை தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வரும் நிலையில், இந்த முறைகேடுகளுக்கு முக்கியப்புள்ளியாக இருந்த அப்போலோ பயிற்சி மைய இயக்குனர் சாம் ராஜேஸ்வரனை, மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்த திட்டமிட்டிருந்ததாக தகவல் பரவியது.