மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் அமமுக கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்கை முகாமை துவக்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேலையை துவங்கி விட்டோம் என்றார். ஆர் கே நகர் தேர்தலில் முதலில் எங்களை ஆதரித்தும் பின்னர் எதிர்த்தும் ஆளும் கட்சியினர் தேர்தலில் ஈடுபட்டனர். ஆனால் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் TTV வெற்றி பெற்றார். அதே போல் திருப்பரங்குன்றம் ,திருவாருர் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார். மேலும் அதிமுகவில் உள்ள பெரிய மேதாவிகள் விலகி எங்களிடம் கட்சியையும் சின்னத்தையும் ஒப்படைத்தால் நல்லது என்றதுடன் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் குக்கர் சின்னத்தை கேட்டுள்ளதாகவும் அது இல்லையென்றாலும் பேனா, பல்பு, டார்ச் உள்ளிட்ட எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம் என தங்க தமிழ் செல்வன் கூறினார்.
A member of the Amalgamat party in Adiyanapuram was held at Tiruparankundram in Madurai district. Special Guest Secretary Tamil Selvan participated as a special guest and met the journalists at the Siruggi camp.