மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அமிதாப்பச்சன், விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்திகளை படிக்கும்போது மிகவும் வேதனை அடைந்ததாக கூறினார். 15 ஆயிரம், 20 ஆயிரம், 30 ஆயிரம் என வாங்கிய கடனை கூட திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை அறிந்து பல ஆண்டுகளுக்கு முன்பே வருந்தினேன் என்றும், தற்போது வங்கிகளிடம் இருந்து விவசாயிகளின் கடன் பட்டியலை பெற்று 200 விவசாயிகள் வாங்கிய 1 கோடியே 50 லட்சத்துக்கான கடனை செலுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் அமிதாப்பச்சனின் இந்த உயர்ந்த எண்ணம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.