சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்

2018-08-29 1

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்து வருகிறது. இதனால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதேபோல், சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போரும் சர்வதேச சந்தையை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில், டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்வை சந்தித்து வருகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 13 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 81ரூபாய் 22 காசுகளுக்கும், டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து 73 ரூபாய் 69 காசுகளுக்கும், விற்பனை செய்யப்படுகிறது.


Videos similaires