கோயம்பேடு பூ மார்கெட் கண்காணிப்பாளராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் பூ மார்கெட்டில் காலி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேலையில் ஈடுபட்டார். அப்போது ஒரு மலர் அங்காடியின் ஓரமாக இருந்த காலி இடத்தில் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூக்களை எல்லாம் வரிசையாக தரையில் கொட்டிவிட்டார். இதனால் கடைக்காரருக்கும் கண்காணிப்பாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பூக்களை வீணாக தரையில் கொட்டுவதை விட அதை கைப்பற்றி நடவடிக்கை எடுத்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.காலி இடங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என ஏற்கனவே அறிவுறுத்தியும் கேட்காததாலே அப்புறப்படுத்தும் வேலையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.