கூட்டணிக்கு கொக்கி போடும் தமிழிசை

2018-08-28 518

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவஞ்சலியில் பாஜக கலந்து கொள்ளும் என்று மாநில தலைவர் தெரிவித்தார்.

திருநெல்வேலி நடைபெறும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொள்ள தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையம் வருகைதந்த பாரதிய ஜனதாகட்சி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கலைஞர் அவர்களின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகைதந்துள்ளதாக தெரிவித்த அவர், இது போன்ற கூட்டத்தை வரும் 20 ஆம் தேதி சென்னையில் நடத்த உள்ளதாக தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார். மேலும் தமிழக அரசியலில் இதுபோன்ற அரசியல் நாகரிகம் தெரியவருவது ஆறுதலைத் தருகிறது என்றார். தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து வருவது ஆரோக்கியம் தரும் என்றார்.

பாஜக தலைவர் அமித்ஷா வருவது இதுவரை உறுதியாகவில்லை என்ற அவர் ,அவருக்கு பதிலாக முக்கிய பாஜக தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.

The BJP leader said that the BJP will attend the memory of the late DMK leader Karunanidhi

Videos similaires