அமைச்சூர் மல்யுத்த சங்கத்தின் சார்பாக உப்பளம் விளையாட்டு திடலில் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு எடை பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டி நேற்று இரவு நிறைவடைந்தது. இதன் நிறைவு விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, விளையாட்டு துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பரிசுகளை வழங்கி கவுரவித்தார்