ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்

2018-08-27 1

ஜகார்த்தாவில்18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான நேற்று,100 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட டூட்டி சந்த் வெள்ளிபதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவர் 11 புள்ளி 32 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக ஆசிய விளையாட்டுப்போட்டியின் மகளிர் பிரிவின் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் ஹிமாதாஸ் வெள்ளி பதக்கமும், ஆடவர் பிரிவின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் முகமது அனாஸ் யசியா வெள்ளி பதக்கமும் வென்றிருந்தனர். இந்த பதக்கங்கள் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது

Videos similaires