சூரத் நகரில் பல்சானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் பலேஷ்வர் கிராமம் அருகில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் எதிர்ப்புறம் சென்றதால், எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால், காரில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விரைந்து வந்து, விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்