புதுச்சேரியின் வார கடைசியில் நீர் நிலை குறித்த ஆய்வினை மேற்கொண்டு வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி184 வது நாளாக இன்று சங்கராபரணி ஆறு மற்றும் பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டார். 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நீரினை பாதுகாக்க போதிய வசதிகளை ஏற்படுத்துவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் சேகரிப்பு, நீர் ஆதாரங்களை பெருக்கி, நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் என கிரண்பேடி பல்கலைகழக அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார்.
மேலும் பல்கலைக்கழகத்தில் உருவாகும் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவது குறித்தும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். முன்னதாக சங்கராபரணி ஆற்றை பார்வையிட்ட துணைநிலை ஆளுநர், அங்கு பழுதடைந்துள்ள படுகை அணையை சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். தொடர்ந்து பல்கலைகழகம் செல்லும் வழியில் ஊசுட்டேரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணியினையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை, வேளாண் துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்