செங்கல் சூளைகள் அடியோடு நாசம்- வீடியோ

2018-08-21 886

காவிரி மற்றும் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 30 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அடியோடு நாசமானதால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்

தமிழக அளவில் ஆங்காங்கே, வானிலை அறிக்கையின் படி ஒரு சில இடங்களில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஆங்காங்கே லேசான முதல் மிதமான வரை மழை பெய்து வரும் நிலையில், கரூர் மாவட்ட அளவில் ஒரு சொட்டு கூட மழை பெய்ய வில்லை என்றாலும், காவிரி, நொய்யல், அமராவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த நதிகள் முழுவதும் கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், திருமுக்கூடலூரில் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த காவிரி ஆறாக உருவெடுத்து மிகப்பெரிய வெள்ளத்தில் மிதக்கின்றது. வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் காவிரி ஆற்றின் கரையோரம், செங்கல் சூளைகள் முற்றிலும் நாசமாகியுள்ளது. கரூர் அடுத்த வாங்கல் பகுதியில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் அடியோடு மூழ்கியது இதனால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்

Des: Workers are suffering from more than 30 brick kilns by flooding on the banks of Cauvery and Amaravati

Free Traffic Exchange

Videos similaires