ஆடு விற்பனை அமோகம் !அதகளப்படுத்தும் பக்ரீத்- வீடியோ

2018-08-21 592



பக்ரீத் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி சந்தையில் ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றுவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி, கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளியில் மாபெரும் ஆட்டு சந்தைகூடியது.இந்த ஆட்டு சந்தயில் கிருஷ்ணகிரி, ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி மட்டுமின்றி தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகளை, விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்..ஆடுகளை வாங்க உள்ளுர் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வருகை தந்ததால், ஆடுகளின் விற்பனையும், விலையும் உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்சியடைந்தனர்.இன்று ஒரோ நாளில் மட்டும், சுமார் 50 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

Des: Farmers are pleased to see the sale of goat in Krishnagiri market at Bakrid Festival

Videos similaires