திருவாரூரில் இடைத்தேர்தல் வந்தால் அம்மா மக்கள் முன்னேற்றகழகம் தான் வெற்றி பெறும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் கலந்து கொண்டார். அப்போது கருணாநிதி இருந்தவரையில் திருவாரூர் அவர் தொகுதி. அவர் மறைந்து விட்டதால் இனி அது நமது தொகுதி என்றார். தமிழகத்தில் தற்போது நடைபெறும் அரசு மக்கள் விரும்பாத திட்டங்களை தான் செயல்படுத்தி வருவதாகவும் அதற்கு தமிழக முதல்வரும் துணை முதல்வரும் ஆர்வம் காட்டுவதாக கூறினார். தமிழகத்தில் கோவில் சிலைகள் திருடு போவதை பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு கண்டுபிடிக்கிறார். ஆனால் அவற்றை தமிழக அரசு அதனை தடுக்கும் நோக்கத்தில் செயல்படுவதாக தெரிவித்தார்.
Des: Trivia Dinakaran said that if there is a mid-election in Thiruvarur, the success of the people will be successful.