கடன் தொல்லையால் விபரீத முடிவு-வீடியோ

2018-08-17 943

திருப்பத்தூர் அருகேயுள்ள கந்திலி அடுத்த மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான இருந்து வருபவர் காவேரி. இவர் மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு திருமணமாகி நேத்ரா, பவித்ரா, அகிலன் ஆகிய 2 பெண்குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. காவேரிக்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதால் கடன் தொல்லை இருந்து வந்தது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர சென்ற காவேரி அவர்களுக்கு பிரியாணியில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு தானும் அதனை சாப்பிட்டுள்ளார். மேலும் குளிர்பானத்திலும் விஷம் கலந்துகொடுத்துவிட்டு தானும் அதனை பருகியுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற நால்வரும் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால் காவேரி,நேத்ரா,பவித்ரா,ஆகிய மூன்று பேரும் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் சிறுவன் அகிலனுக்கு மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடன் தொல்லையால் கட்டிட மேஸ்திரி 3 குழந்தைகளுடன் விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கந்திலி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Kaveri is a construction worker from Kantali next manguppam village near Tirupattur. His wife is Lingamma. There are two daughters and a baby boy - Nithra, Pavithra and Akilan. Covered from debt in various places for Kaveri. There was often a dispute between husband and wife.

Videos similaires