ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நீதிமன்றமே கைது செய்வதற்கு தடைவிதித்துள்ள நிலையில் காவல்துறையினர் நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டி தொந்தரவு செய்து வருவதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி 3வது மைல் முருகேசன் நகரைச் சேர்ந்தவர் கோட்டாளமுத்து. இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர் கடந்த மே 22ல் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி சிப்காட் காவல் நிலையத்தில் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த நபரை பகல் முழுவதும் அடித்து துன்புறுத்தி நீதிமன்றம் கொண்டு சென்ற போது நீதிபதி ஏற்க மறுத்ததுடன் கைது செய்ய மறுப்பு தெரிவித்து விடுவித்துள்ளார்.
உடனே வீட்டிற்கு வந்த கோட்டாளமுத்துவை தொடர்ந்து மீண்டும் இரவு 12 மணிக்கு வீட்டை தட்டி மீண்டும் வேறொரு வழக்குப்பதிவு செய்து கைது செய்ய சென்ற காவல்துறை கதவை தட்டியும் திறக்காததால் உடைக்க முற்பட்டுள்ளனர். இதுகுறித்து கோட்டாளமுத்துவின் தாய் 100க்கு போன் செய்துள்ளார். உடனே அங்கிருந்து சென்றுள்ளனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட கலவரத்தில் ஈடுபடாத எங்களை இது போல் தொந்தரவு செய்தால் குடும்ப மாத தற்கொலை செய்யப் போவதாக அக்குடும்பத்தினர் தெரிவித்தால் கைது செய்யாமல் சென்றுள்ளனர். தூத்துக்குடி கலவரத்திற்கு பிறகு தற்போது தான் அமைதி திரும்பி வரும் நிலையில் மீண்டும் கைது நடவடிக்கைகளால் மீண்டும் காவல்துறைக்கு எதிரான வன்முறைகள் வந்து விடுமோ என்ற அச்ச உணர்வு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Des : The victims have complained that the police are banning the arrest of those involved in the anti-Sterlite protests, as the police are trying to commit suicide by hitting the door of the house at midnight.