சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்- வீடியோ

2018-08-17 16

14 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப் பட்டி பகுதியை சேர்ந்தவர் கமால்தீன். கறிக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கமால்தீன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் தேவதானப்ட்டிகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் தேவதானப்பட்டி காவல் துறையினர் கமால்தீனை கைது செய்து விசாரித்து வருகிண்றணர்.

மேலும் இதே மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக சையது காதர் என்பரை கடந்த 11ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்தனர். இதனிடையில் சம்மந்தப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை செய்தபோது கமால்தீனும் பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவி கூறியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Police have been detained and arrested for alleged sexual assault by a 14-year-old girl.

Videos similaires