கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் பரவலாக தென்மேற்கு மழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கேரளாவில் இருந்து வரும் நீரால் கோவை சிறுவாணி அணை நிரம்பி வழிகிறது. இதனால், கோவை குற்றாலம் அருவியில் நீர் கொட்டுகிறது. எனவே, நான்காவது நாளாக இன்றும், கோவை குற்றலாம் அருவிக்கு சுற்றலாப் பயணிகள் செல்லவும்,குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மழை வெள்ளம் குறைந்ததும், சுற்றலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.