காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு
நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கே.ஆர்.எஸ் மற்றும் கபிணி அணைகளுக்கு வதுரும் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 62 ஆயிரம் கனஅடியும், கபிணி அணையில் 80 ஆயிரம் கனஅடி என மொத்தம் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 319 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.