வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது மர்ம கும்பல் வழிமறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுவையில் காலாப்பட்டியில் இயங்கும் தனியார் மருந்து நிறுவனத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்தும் ஏஜெண்டாக பணியாற்றி வந்தவர் ஜோசப். இவர் புதுவை மாநிலத்தில் வடக்கு மாவட்ட தலைவராக உள்ளார். தனது இரு சக்கர வாகனத்தில் பொம்மையார்பாலையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து அரிவாளால் கொடூராமாக வெட்டியது. இதில் ஜோசப். சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரியவர சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன் கொளையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Des : The incident happened when the Northern District Congress leader went on a bicycle and killed the mysterious mob.