திருவண்ணாமலையில் கடந்த 16ம் தேதி பாலியல் துன்புருத்தலுக்கு ஆணான ரஷ்யநாட்டு பெண்ணுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிதுறை காவல்துறை சார்பில் 2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த ஹலினா இவர் இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க கடந்த 12-ல் மும்பை வழியாக திருவண்ணாமலை வந்தார். கிரிவலப் பாதையில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் வாடகை வீடு எடுத்து தங்கினார். அருணாசலேஸ்வரர் கோவில் ரமணாஸ்ரமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தார். கடந்த 14-ல் அறையினுள் சென்றவர் மீண்டும் வெளியே வரவில்லை. இதில் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று ஜன்னல் வழியாக பார்த்தபோது அலங்கோலமான நிலையில் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் மார்பகம் உள்ளிட்ட பகுதிகளில் நகக்கீறல்கள் இருப்பதை போலீசார் கண்டனர். இதனால் அவர் போதை மருந்து கொடுத்து கற்பழிக்கப்பட்டாரா என சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது அறையில் சோதணை செய்தபோது போதை மாத்திரைகளை கைப்பற்றியுள்ளனர்.
Des : Today, the Sri Lankan woman has been awarded with 2 lakh reliefs for the district administration and judiciary police in Tiruvannamalai.