ஆண்டிப்பட்டி அருகே கரடி தாக்கி விவசாயிகள் 2 பேர் படுகாயம்- வீடியோ

2018-07-30 608

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வண்டியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கராஜ் மற்றொரு தங்கராஜ் ஆகிய இருவரும் மலையடிவாரத்தில் உள்ள தங்களின் தோட்டத்திற்கு சென்றனர்.அப்போது புதர் பகுதியில் மறைந்து இருந்த ஒரு கரடி இருவரையும் பயங்கரமாக தாக்கியது.அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கரடியை காட்டுக்கு விரட்டிவிட்டு இருவரையும் பத்திரமாக மீட்டனர். கரடி தாக்கியதில் விவசாயிகள் இருவருக்கும் தலை, மார்பு, கை,கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே கரடி தாக்கிய பகுதியில் வனத்துறையினர் சென்று விசாரணை நடத்தி வருகினறனர்.

Videos similaires