முதலாம் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணை திறப்பு- வீடியோ

2018-07-27 814

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு-94,521 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் ஒரு சுற்றுக்கு 1900 மில்லியன் கன அடி தண்ணீர் திறப்பு-அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் திறந்து வைத்தார்.





திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு. கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்ணன் மின்மோட்டாரை இயக்கி தண்ணீர் திறந்து விட்டார். திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை முதலாம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94,521ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று முதல் முதல் ஒரு சுற்றுக்கு 1900 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று திருமூர்த்தி அணை பிரதச்ன கால்வா யில் இருந்து வினாடிக்கு 250கனஅடி திறக்கப்பட்டு முழு கொள்ளலளவான 912 கன அடி அளவிற்கு அதிகரித்து வழப்படும்.இதனால்திருப்பூர் மாவட்டத்திலுள்ளஉடுமலைபேட்டை,மடத்துக்குளம்,திருப்பூர்,பல்லடம், தாராபுரம் , காங்கயம் மற்றும் கோவை சூலூர் பகுதியில் உள்ள 94,521 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Des : Udumalai Radhakrishnan opened a power motor for water opening at Udumalai Thirumoorthy Dam to the first zone of water for the first zone irrigation -94,521 acres of land for a circuit of 1900 million cubic feet of water.

Videos similaires