ஆந்திரா காட்டுப்பகுதியில் திருப்பதிக்கு செல்வதை போல் ஆடை அணிந்து செம்மரங்களை வெட்டிக்கடத்திய தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது காட்டுப்பகுதியில் இரவு நேரத்தில் நடந்த துப்பாக்கிசூட்டால் பரபரப்பு மேலும் வனப்பகுதிக்குள் தப்பிய மரக்கடத்தல் கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர் - மரக்கடத்தல் கும்பல் தாக்குதலில் வனக்காப்பாளர் பலி
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் சித்தவட்டம் மண்டலம் ராலபோடு வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரங்களை வெட்டி கொண்டிருந்த 70க்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதை அறிந்து அவர்களை சரணடையும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கற்களை போலிசார் மீது வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். கல் வீச்சி சம்பவத்தில் பல வனத்துறையினர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாரிடமிருந்து செம்மரம் வெட்டுவதற்காக வந்தவர்கள் வனப்பகுதியில் தப்பி ஓடினர். இதுகுறித்து செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. காந்தாராவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கூடுதலாக 40 போலீசார் வரவழைக்கப்பட்டு தப்பியோடியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடத்தல்காரர்கள் நடத்திய கல் வீச்சில் படுகாயம் அடைந்த வன காப்பாளர் அசோக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.