வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலற்றில் இரவு பகல் பாராமல் லாரிகள் மூலம் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பாலற்று பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது மணல் ஏற்றி கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த மினி லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது மினி லாரி மற்றும் ஒட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் என்பது தெரியவந்தது. இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது மினி லாரி ஒட்டுனர் பாக்கியராஜ் திடீர் என காவலர்களை தள்ளி விட்டு காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளார். தப்பி ஓடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மணல் கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட கைதி காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் காவலர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.