சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ரயில்வே போக்குவரத்துக்கு எதிராக மக்கள் சென்னையில் போராட்டம் செய்துள்ளனர்.
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இருக்கின்ற ரயிலில் ஏறுவதற்கு பயணிகள் முண்டி அடித்துக் கொண்டு சென்று இருக்கிறார்கள். இதனால் படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்து இருக்கிறார்கள்.