சுமூக பேச்சுவார்தை நடத்த மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை- லாரி உரிமையாளர் சங்கம்- வீடியோ

2018-07-23 583

லாரி உரிமையாளர்கள் போராட்டம் குறித்து சுமூக பேச்சுவார்தை நடத்த மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்று லாரி உரிமையாளர் சங்க மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

வருமானவரி சட்டம் ஏஇ சட்டப்படி உரிய விலை நிர்ணயம் வழங்க வேண்டும், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகைக்கு அதிக தொகை வசூலிக்க கூடாது, பெட்ரோல் டீசல் விலை நிர்ணயத்தை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும், டோல்கேட் கட்டணத்தை வருடத்திற்கு ஒருமுறை லாரி ஓனர்களே கட்ட அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாள் ஒன்றிற்கு 250 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. புக்கிங் அசோசியேசன் ஆதரவு உள்ளதால் லாரிகள் ஓட வில்லை. மத்திய அரசு போராட்டத்தை முடக்கும் நிலையில் செயல்பட்டால் ஏற்பட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Des : The state head of the Larry Owner Union said that the federal government is not interested in holding smooth talks on the issue of Larry owners.

Videos similaires