மண்டபம் வேதாளை கடற்கரையில் இருந்துஇலங்கைக்கு நாட்டுப்படகு மூலம் கடத்தி செல்லப்பட்ட 85 லட்சம் மதிப்பில்லான 1190 கிலோபதப்படுத்தப்பட்ட கடல் அட்டையை மண்டபம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் ரோந்து படகு மூலம் குருசடைத்தீவில் வைத்து சுற்றி வளைத்து பிடித்தனர்.இக்கடத்தலில் ஈடுப்பட்ட மலையாண்டி காசிம் ஆகிய இரண்டு பேரை படகுடன் கைது செய்து தீவிர விசாராணை.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கானப்படும் அரியவகையான கடல்வாழ் உயிரினம் கடல்பசு கடல்குதிரை கடல்அட்டைடால்பின் உள்ளிட்ட உயிரினங்களை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது மேலும் அத்துமீறி பிடித்தால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் வகையில் கடல்வாழ் உயிரினம் பாதுகாப்பு சட்டம் வழிவகை செய்துள்ளது. ஆனால் கடல் அட்டை பிடித்து இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.இதனை காவல்துறை மற்றும் வனத்துறை கடற்படை கடலோரகாவல்படையினர் கண்காணித்தும் தடுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வேதாளைகடற்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை இருப்பதாகவும் அந்த கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த இருப்பதாக ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கடற்கரையில் இருந்து ரோந்து படகு மூலம் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர்கள் குருசடைத்தீவில் நின்ற நாட்டுப்படகை சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட 85 லட்சம் மதிப்பில்லான 1190கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை இருப்பது தெரிய வந்தது.இதில் சம்பவ இடத்தில் படகுடன் இருவரை மரைன் காவல்துறை கைது செய்து மண்டபம் கடலோர பாதுகாப்பு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.
Des : 1190 kilograms of marine card valued at 85 lakhs valley from Sri Lanka