பிரபல தனியார் தொலை காட்சியில் ஒளிப்பரப்பபட்டுவரும் தொடரில் கடவுளை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதால் தொலைகாட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூரில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் அனுப்பர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் கடந்த 14 ம் தேதி வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி என்ற நாடகத்தொடரை பார்க்கும் பொழுது அந்த தொடரில் ராமரும் சீதையும் ஜோடியா உள்ள சிலை ஒன்றை தூக்கி எரிந்து உடைப்பதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்துக்கள் அதிகம் நேசிக்க கூடிய கடவுளை அவமதிக்கும் விதமாக காட்சிகள் அமைத்து அதனை வெளியீடு செய்த ஜீ தமிழ் என்ற தனியார் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.மேலும் பொதுவாக எந்த கடவுளை பற்றியும் தவறாக சித்தரிக்க கூடாது என்றும் மக்களுக்கு நல்லதை மட்டும் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பவேண்டும் என்றும் கூறினார்.
Des: The lawyer has lodged a complaint with the police to take action against the television administration as it has footage to display a dishonest scene in a private private television show.