புதுக்கோட்டை மாவட்ட கிளைச்சிறையில் விசாரணை கைதி ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்;ந்தவர் செந்தில்குமார். இவர் தனது மனைவி பார்வதியை கடந்த மாதம் குடும்ப பிரச்னை காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். இது குறித்து கணேஸ்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். தற்போது அவர் சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. இந்நிலையில் செந்தில்குமார் சிறையில் உள்ள கலையரங்கத்தில் உள்ள சுவர் ஆங்கிளில் தனது வேட்டியால் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் செந்தில்குமாரை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Des: A suicide bomber has committed suicide by hanging a suicide bomber in Pudukottai district branch.