ஈரோடு அருகே மூன்று சிறுமிகளை பாலியல் தொல்லை கொடுத்து விட்டு ஊரை விட்டுத்தப்பி சென்று மீண்டும் நான்காவதாக பதிமூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட போது அவனை பிடித்த பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட காமக்கொடூரனுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையினரிடம் இரவில் மூன்று மணி நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் சரவணன் என்ற விவசாய கூலித் தொழிலாளி ஊஞ்சலுரில் உள்ள மூன்று பெண் குழந்தைகளை பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு கேரளாவிற்கு தப்பி தலைமறைவாகி விட்டு மீண்டும் கொடுமுடி அருகே உள்ள காசி பாளையத்தில் தனது தாயார் வீட்டில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் நேற்று இரவு காசி பாளையத்தில் உள்ள எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஏமாற்றி அப்பகுதியிலுள்ள காலிங்கராயன் வாய்க்கால் அருகே அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் சிலர் சிறுமியிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சரவணனை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இவர் அந்த சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபடுவது தெரியவந்தது.
பிடிபட்ட சரவணன் ஊஞ்சலூர் பகுதியில் உள்ள 16 வயது, 12 வயது, 11 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை பாலியல் தொந்தரவு செய்ததால் அப்பகுதி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து ஊரைவிட்டு துரத்தி விட்டனர். மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் காசிபாளையம் பகுதியில் சரவணன், பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய 13 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டபோது பொதுமக்களிடம் சிக்கி கொண்டார். பொதுமக்களிடமிருந்து மீட்டு சென்ற சரவணிடம் கொடுமுடி போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நான்கு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காம கொடூரனுக்கு உரிய தண்டணை பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.