பிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை- வீடியோ

2018-07-19 1,270

பிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை வளசரவாக்கம் வெங்கடேஸ்வர பெருமாள் நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா(32). சின்னத்திரை நடிகை. இவருக்கும் அருண்பாலன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதமாக கணவரைப் பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டு வேலைக்காரம்மாள் காலையில் வந்து பார்த்த போது பிரியங்கா வீட்டில் போடப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகள் எடுக்கப்படாமல் கிடந்துள்ளது. இதையடுத்து பிரியங்கா வீட்டுக்கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது வீட்டில் படுக்கை அறையில் பிரியங்கா தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.இது குறித்து வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரியங்காவுக்கு சொந்த ஊர் மதுரை. கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே அவர் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்துள்ளார். பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம் தொடரிலும் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.