இயக்குநர் பாரதிராஜா அபராதம் செலுத்திவிட்டால், செய்த தவறு சரியாகிவிடுமா என்றும்
பாரதிராவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா என்று சென்னை உயர் நீதிமன்றம்
கேள்வி எழுப்பியுள்ளது.
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதிய சர்ச்சைக்குரிய கட்டுரைக்கு பெரிய அளவில் எதிர்ப்பு
எழுந்தது. இந்த விவகாரத்தில் இயக்குநர் பாரதிராஜா கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்து
தெரிவித்தார். அதில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது சென்னை
வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Madras High court questioned Director Bharathiraja, he don’t have fear that will arrested by police.