டெல்லி அருகே கட்டிடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலி- வீடியோ

2018-07-18 2,171

டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் சரிந்த விபத்தில் 3 பேர் பலியாகிவிட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கிரேட்டர் நொய்டாவில் ஷா பெரி கிராமத்தில் 4 மாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது.

இங்கு 18 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதன் பக்கத்தில் 6 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த 6 மாடி கட்டடம் திடீரென 4 மாடி கட்டடத்தின் மீது விழுந்தது.

Videos similaires